கைவிடப்பட்ட காணியிலிருந்து கைத்துப்பாக்கி மீட்பு

களுத்துறை – பதுரலிய பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கெலின்கந்த பகுதியில் கைவிடப்பட்ட காணியிலிருந்து புதைக்கப்பட்டிருந்த நிலையில் கைத்துப்பாக்கியும், 05 தோட்டாக்களும் நேற்று வியாழக்கிழமை கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளன.

களுத்துறை மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவு அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் இந்த சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது .

இந்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்களைக் கைது செய்வதற்கு களுத்துறை மாவட்ட குற்றத் தடுப்பு பிரிவினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகிறனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்