கையில் சிக்கிய பாம்பை கடித்து கொன்ற 2 வயது சிறுவன்
இந்தியா பிகாரில் 2 வயது சிறுவன் தனது கையில் இறுக்கமாக சுற்றிக் கொண்ட பாம்பை பல்லால் கடித்துக் கொன்ற சம்பவம் இப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேற்கு சம்பரன் பகுதியைச் சேர்ந்த கோவிந்தா குமார் என்ற 2 வயது சிறுவன் தனது வீட்டின் வெளியே விளையாடிக் கொண்டிருந்த போது நாகப் பாம்பு ஒன்று வந்துள்ளது அதனை பாம்பு என அறியாத அந்த சிறுவன் அதன் மீது கல் ஒன்றை எறிந்தார். சில விநாடிகளில் அந்த பாம்பு சிறுவனின் கையில் இறுக்கமாக சுற்றிக்கொண்டது.
உடனே பாம்பினை அச்சிறுவன் பலமாக கடித்துள்ளதாக தெரியவருகின்றது. சிறுவனின் அலறல் சத்தம் கேட்டு அங்கு வந்த சிறுவனின் பெற்றோர், குழந்தை மயங்கி கிடந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளனர்.
சிறுவனின் கையில் இருந்த பாம்பு இறந்து கிடந்துள்ளது. உடனடியாக சிறுவனை மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் சிறுவன் நலமாக இருப்பதாக அறிவிக்கப்பட்டது.
மேலும் சிறுவன் பாம்பினை கொன்ற சம்பவம் அந்த பகுதி மக்களை வியப்பில் ஆழ்த்தி உள்ளது.