
கையடக்க தொலைபேசிகளின் விலை குறைப்பு
இலங்கையில் கையடக்க தொலைபேசிகளின் விலைகள் 20 வீதத்தால் குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இலங்கையில் கையடக்க தொலைபேசி இறக்குமதியாளர்கள் மற்றும் விநியோகஸ்தர்கள் சங்கம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
டொலரின் பெறுமதியில் ஏற்பட்ட வீழ்ச்சியின் காரணமாகவே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக குறித்த சங்கத்தின் தலைவர் சமித் செனரத் தெரிவித்துள்ளார்.
மேலும், எதிர்காலத்தில் டொலரின் பெறுமதி அதிகரிக்கும் பட்சத்தில், கையடக்க தொலைபேசிகள் மற்றும் அதனுடன் தொடர்புடைய பொருட்களின் விலையில் மீண்டும் மாற்றம் ஏற்படலாம் என அவர் தெரிவித்துள்ளார்.
