
கையடக்கத் தொலைபேசிகளின் விலை அதிகரிப்பு?
ஜனவரி மாதம் முதல் வற் எனப்படும் பெறுமதி சேர் வரி அதிகரிக்கப்படவுள்ள நிலையில், அடுத்த வருடத்தின் ஆரம்பத்திலிருந்து கையடக்கத் தொலைபேசிகள் மற்றும் துணை சாதனங்களின் விலை வேகமாக அதிகரிக்கும் என கையடக்கத் தொலைபேசி இறக்குமதியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
கையடக்கத் தொலைபேசிகளுக்கு இதுவரையில் வற் எனப்படும் பெறுமதி சேர் வரி விதிக்கப்படவில்லை என கையடக்கத் தொலைபேசி இறக்குமதியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
இதன் காரணமாக கையடக்கத் தொலைபேசிகள் மற்றும் துணை சாதனங்களின் விலை சுமார் 18 சதவீதத்தினால் அதிகரிக்கும் என அவர்கள் தெரிவிக்கின்றனர்.
