கைப்பேசியால் வந்த வினை: ஒருவர் உயிரிழப்பு

கொழும்பு – புதிய களனி பாலத்திற்கு அண்மித்த பகுதியில் நேற்று சனிக்கிழமை இரவு ஆயுதம் ஒன்றினால் தாக்கி ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.

சேதவத்தை பகுதியைச் சேர்ந்த 33 வயதுடையவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

தாக்குதலுடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் 2 பேர் உயிரிழந்தவரின் கைப்பேசியை கோரியுள்ளதாகவும் இதன்போது ஏற்பட்ட வாய்த்தர்க்கத்தை அடுத்து சந்தேகநபர்கள் தாக்குதலை நடத்தியுள்ளனர்.

அதில் காயமடைந்த நிலையில், அவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது உயிரிழந்தார்.

வெல்லம்பிட்டி பகுதியைச் சேர்ந்த 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.