கைத்தொலைபேசி நன்மைகள்

💢கைத் தொலைபேசி என்பது இன்று உலகளவில் மனிதர்களையே தொலைக்கும் அளவுக்கு மாறிக் கொண்டு வரும் நடமாடும் சாதனமாக உள்ளது. அந்தளவுக்கு அபரிமித வளர்ச்சியைக் கொண்டுள்ளது என்றே கூறலாம்.

💢கருவில் இருக்கும் குழந்தை தொடங்கி அறுபது வயது கடந்த நிலையில் இருக்கும் பெரியவர் வரை இத்தகைய கைத் தொலைபேசியானது வளர்ச்சி கண்டுள்ளது என்றே கூற வேண்டும். இத்தகைய தொலைபேசியானது தற்சமயம் கொலைபேசியாகக் கூட மாறி வருகின்றமையினைக் காணமுடிகின்றது.

💢இந்த தொலைபேசி ஆரம்பத்தில் தகவலைச் சொல்லவும் தகவலைப் பெறவுமே பயன்படுத்தப்பட்டது. இக்கைத் தொலைபேசி அறிமுகமாக முன்பு தகவல்களைப் பரிமாற்றம் செய்து கொள்ள அந்தக்காலங்களில் புறா தூது, முரசு, தந்தி, கடிதம் என பலதரப்பட்ட ஊடகங்கள் காணப்பட்டன. இது படிப்படியாக வளர்ந்து இப்போது உலக அளவில் எல்லாவற்றையும் கைக்குள் அடக்கி வைத்திருக்கின்றோம் என்பதே உண்மை.

💢இத்தகைய தொலைபேசியானது நன்மையான மற்றும் தீமையான விடயங்களையும் உள்ளடக்கிய ஒரு இயந்திரமாகும் என்பதில் எவ்வித மாற்றமும் இல்லை. அந்த வகையில் இந்த தொலைபேசயினுடைய நன்மைகளைப் பற்றி ஆராய்வது பற்றிய கட்டுரையாகவே இது அமைந்துள்ளது.

💢இன்று மாணவர்களின் கல்வி தொடங்கி நுண் கடன் பெறும் பொறிமுறையாகவும் இந்த தொலைபேசி காணப்படுகின்றதென்றால் ஆச்சரியப்படுவதற்கில்லை. இருந்த இடத்திலேயே எவ்வித அலைச்சலுமின்றி தேவைகளை நிறைவேற்றிக் கொள்ளக் கூடியவகையில் தொலைபேசி காணப்படுகின்றது.

💢மாணவர்கள் மத்தியிலும் கூட கல்வி கற்றல் நடவடிக்கைகளில் கைத்தொலைபேசியினுடைய செல்வாக்கு அதிகளவில் காணப்படுகின்றதெனலாம். இவ்வாறாக இன்று இந்த கைத்தொலைபேசியினுடைய பயன்பாடு அதிகரித்த வண்ணமே இருக்கின்றது.

💢போலியான தகவல்களைப் பரப்புவதில் தொலைபேசியினுடைய செல்வாக்கு அதிகரித்திந்தாலும், சில நேரங்களில் உண்மைத்தன்மையினை வெளிக்காட்டும் கருவியாகவும் இந்த தொலைபேசி திகழ்கின்றதெனலாம். மேலும் தொலைபேசியின் வாயிலான சமூகவலைத் தளங்களினூடாக வெளியிடப்படும் பொழுதுபோக்கான விடயங்களை பார்வையிடுவதன் மூலம் மன ரீதியாக ஏற்படுகின்ற அழுத்தங்களைப் போக்கக்கூடியதாகவும் இருக்கின்றது. முக்கியமாக மக்கள் மனதில் அதிலும் முகப்புத்தக வாயிலான தம்முடைய பொழுதுபோக்கினை களிப்பவர்கள் பெரும்பாலும் ‘மீம்ஸ்’ என்ற விடயத்தினூடாக தம்மை மனதளவில் மகிழ்ச்சியாகவும் குதூகளிப்பாகவும் வைக்கின்றார்கள்.

💢இதை விட அந்த காலத்திலெல்லாம் வங்கிகளில் பணவைப்பு மற்றும் பணம் தொடர்பான விபரங்களை அறியவும் வங்கிக்கு செல்லவேண்டிய தேவை இருந்தது ஆனால் இன்று அவ்வாறில்லை கையடக்கத்தொலைபேசியினூடாகவே அனைத்து விதமான தேவைகளையும் மக்கள் பெறுகின்றனர். இருப்பினும் இன்றைய நவீன தொழில்நுட்ப வளர்ச்சியின் காரணமாக தொலைபேசியினூடாக பணம் பறிமுதலும் செய்யப்படுகின்றதென்பதும் குறிப்பிடத்தக்கது. ஆகவே நாம் அவதானமாக செயற்படுவது நன்று.

💢தொழில் வாய்ப்புக்களைத் தேடும் இடமாகவும் தொலைபேசி காணப்படுகின்றதென்பதிலும் எவ்வித மாற்றமுமில்லை. வேலை தேடுவதிலிருந்து வீட்டிலிந்து கொண்டே வேலை செய்வதும், நேர்முகப்பரீட்சைக்குத் தோற்றுவதும் கூட இந்த கையடக்கத் தொலைபேசியின் வாயிலாகவே இன்றைய காலகட்டத்தில் இடம்பெறுகின்றது. ஆன்லைன் வேலைவாய்ப்புக்களைப் பெறுவதும் கூட இடம்பெறுகின்றது. கற்காலம் தொடக்கம் தற்காலம் வரையில் உலகில் நிகழ்ந்த அசைவுகள் பற்றிய செய்திகளை அறியக் கூடிய வகையில் இந்த கையடக்கத்தொலைபேசி காணப்படுகின்றதென்றால் அது மிகையில்லை.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்