
கைது செய்ய சென்ற அதிகாரியின் முகத்தை கடித்த போதைப்பொருள் வியாபாரி கள் சம்பத்!
மட்டக்குளி சமித்புர பிரதேசத்தில் போதைப்பொருள் கடத்தல்காரரான சஞ்சீவ துஷார என்றழைக்கப்படும் கள் சம்பத் என்பவரை போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் கைது செய்துள்ளனர்.
குறித்த நபர் போதைப்பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டவர் என மதுவரித் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதன் போது போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் சந்தேக நபரைக் கைது செய்வதற்காக சென்றபோது, ஏறக்குறைய நூறுக்கும் மேற்பட்ட கிராம மக்கள் ஒன்றிணைந்து அவரை மீட்க முயன்றுள்ளனர் .
இதன் போது குறித்த நபர் அதிகாரியொருவரின் முகத்தைக் கடித்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இதனையடுத்து, அவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக மதுவரித் திணைக்களம் தெரிவித்துள்ளது.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்
