
கைது செய்யப்பட்ட எட்டு இந்திய மீனவர்களுக்கும் 22 ஆம் திகதி வரை விளக்கமறியல்!
மன்னார் வளைகுடா கடற்பரப்பில், நேற்று ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்ட, எட்டு இந்திய மீனவர்களும் எதிர்வரும் 22ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட எட்டு இந்திய மீனவர்களும், கடற்படையினரால் கிளிநொச்சி மாவட்ட கடற்றொழில் நீரியல் வளத்திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டனர்.
இந்நிலையில், நேற்று மாலை கடற்றொழில் திணைக்கள அதிகாரிகள், கிளிநொச்சி மாவட்ட நீதிமன்ற பதில் நீதவான் எஸ்.சிவபாலசுப்பிரமணியம் முன்னிலையில், அவர்களை ஆஜர்படுத்தியபோதே, குறித்த எட்டு இந்திய மீனவர்களும் எதிர்வரும் 22ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
