கைது செய்யப்பட்டுள்ள போராட்டக்காரர்கள் தொடர்பில் ஆராயும் நடவடிக்கை ஆரம்பம்

காலிமுகத்திடல் போராட்டம் மற்றும் பொது சொத்துக்களை சேதப்படுத்தியோர் தொடர்பில் தற்போது கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களின், வங்கிக் கணக்குகள் மற்றும் தொலைபேசி உரையாடல்களை ஆராயும் நடவடிக்கை தயாராகி வருவதாக பொது பாதுகாப்பு அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

ஏற்கனவே, வெளிநாட்டில் இருந்து பல மில்லியன் ரூபா போராட்ட காரர்களின் வங்கிக் கணக்கிற்கு வைப்பிட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.