கைது செய்யப்பட்டவர்களில் 150 பேர் ஜே.வி.பி யினர்
பாராளுமன்ற உறுப்பினர்கள் வீடுகள் மீது நடத்திய தாக்குதல்களுடன் ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் ஜே.வி.பிக்கு தொடர்புள்ளது. அதற்கான ஆதாரங்களும் எம்மிடம் உள்ளது எனவும் இது தொடர்பில் அந்தக் கட்சிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என முன்னாள் இராஜாங்க அமைச்சர் அருந்திக பெர்ணான்டோ தெரிவித்துள்ளார்.
கிராம மட்டத்தில் இரு கட்சிகளுக்கும் தொடர்புள்ள தலைவர்கள் உள்ளனர். அவர்கள் தொடர்பில் நியாயமாக விசாரணை நடத்தி அவர்களை கட்சியில் இருந்து அகற்ற வேண்டும். அவர்கள் தொடர்பான ஆதாரங்கள் எம்மிடம் உள்ளன. ஜே.வி.பி தலைவர்களின் வழிகாட்டல்களுடனே இந்த தாக்குதல்கள் நடந்ததாக கருதுகிறோம்.
நான் அரசியலின் ஊடாக 5 சதம் கூட தவறாக சம்பாதித்து கிடையாது. ஆனால், எனது அனைத்து சொத்துக்களும் அழிக்கப்பட்டன. எனவே தவறான முன்மாதிரியை காண்பிக்க வேண்டாம் என கோருகிறோம் 1988-,89 போன்ற நிலையை ஏற்படுத்த முயலக் கூடாது என்றார்.
நான் பொலிஸ்மா அதிபருடன் பேசினேன். கைதுசெய்யப்பட்ட 400 பேரில் 150 பேர் ஜே.வி.பி ஆதரவாளர்கள் என அவர் குறிப்பிட்டதாகவும் அவர் தெரிவித்தார் என்றும் குறிப்பிட்டுள்ளார்.