கைதியிடமிருந்து கையடக்கத் தொலைபேசி மீட்பு

யுக்திய நடவடிக்கையின் போது பூஸா சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதிapன் இடுப்பில் மறைத்து வைத்திருந்த கைத்தொலைபேசிகளை பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் கைப்பற்றியுள்ளனர்.

பூஸா சிறையில் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின் போதே கைதியிடமிருந்து கைத்தொலைபேசிகள், சார்ஜர்கள், பெட்டரிகள் என்பவை கைப்பற்றப்பட்டுள்ளன.

இது தொடர்பில் மேலதிக விசாரணைகளை விசேட அதிரடிப்படை அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.