கைக்குண்டுடன் ஒருவர் கைது

-கிளிநொச்சி நிருபர்-

தருமபுர பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் உழவனுர் பகுதியில் இன்று செவ்வாய்கிழமை தர்மபுரி பொலிஸாருக்கு  கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய சுற்றிவளைப்பில் மேற்கொண்டு சோதனை செய்த போது சந்தேக நபர் ஒருவர் அப்பகுதியில் இனங்காணப்பட்டதை அடுத்து அவரை சந்தேகத்தின் பேரில் சோதனையிட்ட போது அவர் உடமையில் மறைத்துவைக்கப்பட்டிருந்த நிலையில் தமிழன் கைக்குண்டு ஒன்றை வைத்திருந்த குற்றச்சாட்டில் சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்

சந்தேக நபரிடம் மேலதிக விசாரணைகளின் போது தாம் கைக்குண்டினை கைவிடப்பட்ட பகுதியிலிருந்து எடுத்ததாகவும், அதனை பொலிஸாரிடம் ஒப்படைப்பதற்காக வைத்திருந்ததாகவும் தெரிவித்துள்ளார்.

இச்சம்பவம் தொடர்பாக பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வரும் வரை, சந்தேகநபர் 14 நாட்களுக்கு தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ளார், என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.