கைகால்கள் கட்டப்பட்ட நிலையில் வயோதிப பெண்ணின் சடலம் மீட்பு
புத்தளம், மதுரங்குளிய நல்லன்தலுவ பிரதேசத்தில் 3 பிள்ளைகளின் தாய் ஒருவர் நேற்று செவ்வாய்க்கிழமை கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ள நிலையில் பொலிஸார் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.
சம்பவத்தில் மதுரங்குளிய நல்லன்தலுவ பிரதேசத்தைச் சேர்ந்த செல்வமரிக்கார் அயினா உம்மா (வயது – 71) என்ற மூன்று பிள்ளைகளின் தாயே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த பெண் அவருக்குச் சொந்தமான தென்னந்தோப்பு காணியில் உள்ள வீட்டில் தனியாக வசித்து வரும் நிலையில் , பிள்ளைகள் எப்போதாவது அவரை பார்க்க வருவதாகவும் தெரியவந்துள்ளது.
உயிரிழந்த வயோதிப பெண் வீட்டினுள் ஆடைகளின்றி கைகளையும் கால்களையும் கட்டி ஏதோ ஒரு வழியில் கொல்லப்பட்டிருக்க வேண்டும் எனவும் உடலில் வெட்டுக்களோ அல்லது வேறு காயங்களோ காணப்படவில்லை என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
வயோதிப பெண்ணிடம் அதிக அளவில் பணம் இருந்திருக்கலாம் என சந்தேகம் வெளியிட்டுள்ள பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்
