
கைகலப்பில் ஒருவர் உயிரிழப்பு 14 பேர் கைது
தெஹிவளை பகுதியில் குளிரூட்டி திருத்தும் நிலையம் ஒன்றில் நேற்று செவ்வாய்கிழமை இரவு இடம்பெற்ற தாக்குதலின் போது ஒருவர் உயிரிழந்தார்.
இது தொடர்பில் 14 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதன்போது, 27 வயதான ஒருவர் மரணித்ததுடன் மற்றுமொருவர் காயமடைந்துள்ளார்.
குறித்த நிலையத்துக்குள், பலவந்தமாக நுழைய முற்பட்டதாக கூறப்படும் இருவர் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொலிஸார் இது தொடர்பில் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்
