
கேரள கஞ்சாவுடன் உடுத்துறையில் ஒருவர் கைது
-யாழ் நிருபர்-
கேரள கஞ்சாவை உடமையில் வைத்திருந்த குடும்பஸ்தர் மருதங்கேணி பொலிசாரால் நேற்று முன்தினம் திங்கட்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார்.
வடமராட்சி கிழக்கு உடுத்துறை பகுதியை சேர்ந்தவரே இதன் போது கைது செய்யப்பட்டுள்ளார்.
பொலிசாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலை அடுத்து மேற்கொண்ட சுற்றிவளைப்பில் 2 கிலோ கேரள கஞ்சாவுடன் குறித்த நபர் பொலிசாரால் கைது செய்யப்பட்டார்.
சந்தேக நபர் மேலதிக விசாரணையின் பின்னர் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக மருதங்கேணி பொலிசார் தெரிவித்துள்ளனர்.
