கெஹெல்பத்தர பத்மே உள்ளிட்ட 5 பேர் நாட்டுக்கு அழைத்து வரப்பட்டனர்
இந்தோனேசியாவில் கைதுசெய்யப்பட்ட குற்றக்குழு உறுப்பினர்கள் நாட்டுக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்.
கெஹெல்பத்தர பத்மே உள்ளிட்ட 5 குற்றக்குழு உறுப்பினர்களை ஏற்றிய விமானம் இந்தோனேசியாவின் ஜகார்த்தாவிலிருந்து சற்றுமுன்னர் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்ததாக தெரிவிக்கப்படுகிறது .
நாட்டில் இடம்பெற்ற பல்வேறு குற்றச் செயல்களின் பின்னணியில் செயற்பட்டதாக கூறப்படும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக்குழுக்களின் உறுப்பினர்கள் நேற்று முன்தினம் இலங்கை பொலிஸாரால் இந்தோனேசியாவில் வைத்துக் கைது செய்யப்பட்டனர் .