
கெஹெலிய ரம்புக்வெல்ல உள்ளிட்ட 6 பேர் மீளவும் விளக்கமறியலில்
தரமற்ற இம்யூனோகுளோப்ளின் தடுப்பூசி இறக்குமதி செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் கைதான முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல உள்ளிட்ட 6 பேர் மீளவும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
சந்தேகநபர்களை இன்று வியாழக்கிழமை மாளிகாகந்த நீதிவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்திய போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, கெஹெலிய ரம்புக்வெல்ல உள்ளிட்ட 6 பேரை எதிர்வரும் 14ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
