
கெய்லி பிரேஸர் தாக்கல் செய்த மனுவை மேன்முறையீட்டு நீதிமன்றம் நிராகரித்துள்ளது
தன்னை நாடு கடத்தும் உத்தரவை ரத்துசெய்ய கோரி, பிரித்தானிய பெண்ணான கெய்லி பிரேஸர் தாக்கல் செய்த மனுவை மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று செவ்வாய்க்கிழமை நிராகரித்துள்ளது.
மருத்துவ விசாவில் கெய்லி ப்ரேஸர் இலங்கை வந்திருந்தார்.
இந்நிலையில், காலி முகத்திடலில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு ஆதரவளித்து காணொளி ஒன்றை கெய்லி பிரேஸர் வெளியிட்டிருந்தார்.
அதனைத்தொடர்ந்து, பிரித்தானிய பெண்ணான கெய்லி பிரேஸரின் விசாவை குடிவரவு, குடியகல்வு திணைக்களம் ரத்துசெய்ததுடன், ஆகஸ்ட் 15க்கு முன்னர் நாட்டை விட்டு வெளியேற உத்தரவிட்டது.
எவ்வாறாயினும், தம்மை நாடு கடத்துவதற்கு எதிரான தீர்மானத்தை ரத்து செய்ய உத்தரவிடுமாறு கோரி, இந்த மனுவை அவர் தாக்கல் செய்திருந்தார்.
குறித்த மனுவை மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று நிராகரித்துள்ளது.
