கெப் ரக வாகனம் வீதியோர கற்களில் மோதி விபத்து

-மன்னார் நிருபர்-

மன்னார் தள்ளாடிக்கும் பெரிய பாலத்திற்கும் இடையில் கெப் ரக வாகனம் வீதியோர கற்களில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

மன்னார் சிலாவத்துறை வேப்பங்குளம் பகுதியில் இருந்து கடல் உணவு ஏற்றி வந்த கெப் ரக வாகனமே இன்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை இரண்டு மணியளவில் இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.

குறித்தி வாகனத்தின் சாரதி நித்திரை கலக்கத்தில் வீதியோர கற்களில் மோதி வாகனம் தடம் புரண்டுள்ளதுடன் வாகனத்தின் சாரதி காயங்களுடன் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

 

இந்த விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை மன்னார் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

கெப் ரக வாகனம் வீதியோர கற்களில் மோதி விபத்து

கெப் ரக வாகனம் வீதியோர கற்களில் மோதி விபத்து

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்