கெப் ரக வாகனம் ஒன்று சுமார் 30 அடி பள்ளத்தில் விழுந்து விபத்து

-பதுளை நிருபர்-

பசறை நமுனுகுலை பிரதான வீதியில் பசறை கோணக்கலை கஹவத்தைப் பகுதியில் இருந்து பதுளை நோக்கி சென்று கொண்டிருந்த கெப் ரக வாகனம் ஒன்று கோணக்கலை புஹுல்வத்தை பாடசாலைக்கு அருகாமையில் இருந்த பாலத்தில் இருந்து சுமார் 30 அடி பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளானது.

இச்சம்பவம் இன்று செவ்வாய்க்கிழமை காலை 8.00 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

வாகன சாரதி அயலவர்களின் உதவியுடன் மீட்கப்பட்டு பசறை போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் மேலதிக சிகிச்சைகளுக்காக பதுளை வைத்தியசாலைக்கு இடமாற்றப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.

மேலதிக விசாரணைகளை பசறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.