கெட் போன் பயன்படுத்தியவாறு உறங்கச்சென்ற இளைஞனின் கதி

கேகாலை பகுதியில் உள்ள வீடொன்றில் கெட் போன் பயன்படுத்தியவாறு உறங்கச் சென்ற இளைஞன் தூக்கத்திலேயே உயிரிழந்துள்ளதாக ஹலவத்தை பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

ஆராச்சிக்கட்டுவ பங்கதெனிய வெஹரகல பிரதேசத்தை சேர்ந்த 21 வயதுடைய இளைஞரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இறப்பிற்கான காரணம் இதுவரை வெளியாகவில்லை என்பதுடன் ஹலவத்தை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.