கெசல்கமுவ ஓயாவில் இருந்து பெண் சடலமாக மீட்பு
நோர்வூட் சென்ஜோன் டிலரி கீழ்பிரிவு பகுதியில் கெசல்கமுவ ஓயாவில் இருந்து இன்று செவ்வாய்கிழமை காலை பெண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
சென்ஜோன் டிலரி கீழ்பிரிவு ஐந்து பிள்ளைகளின் தாயான 56 வயதுடைய பெண் ஒருவரின் சடலமே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளது.
குறித்த பெண் நேற்று திங்கட்கிழமை இரவு நித்திரைக்கு சென்றுள்ளார், எனினும் இன்று காலை வீட்டிலிருந்து காணாமல்போயிருந்தமையினால், அவரை தேடும் முயற்சியில் உறவினர்கள் ஈடுபட்டிருந்தனர். இதன்போது, கெசல்கமுவ ஓயாவிலிருந்து அவர் சடலமாக மீட்கப்பட்டதாக நோர்வூட் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்