‘கூலி’ பட நடிகை ரச்சிதா ராமுக்கு விரைவில் திருமணம்

கன்னட சினிமாவில் பிரபலமான ரச்சிதா ராம், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்தின் ‘கூலி’ திரைப்படத்தில் நடித்து கலக்கினார்.

33 வயதாகும் ரச்சிதா ராம் சிங்கிளாகவே இருந்து வந்ததால் சமூக வலைதளங்களில் ரசிகர்கள் காதல் தூது விட்டு வந்தனர்.

இந்நிலையில் ரச்சிதா ராம் திருமண பந்தத்தில் இணையவுள்ளாராம்.

இதுகுறித்து அவர் கூறுகையில், ”இன்னும் சில நாட்களில் நான் தாம்பத்திய வாழ்க்கையில் கால் பதிக்க இருக்கிறேன்.

வீட்டில் எனக்கு வரன் பார்க்கும் படலம் வேகமாக நடந்து வருகிறது”, என குறிப்பிட்டுள்ளார்.