கூலி திரைப்படத்தின் இரண்டாவது பாடல் வெளியானது

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜிகாந்த் நடிப்பில் வெளியாகவுள்ள திரைப்படம் ”கூலி” ஆகும்.

இந்த திரைப்படத்தில் அமீர் கான்,நாகார்ஜுனா, உபேந்திரா, சோபின் சாஹிர், சத்யராஜ், சுருதிஹாசன் என நட்சத்திர பட்டாளங்கள் நடித்துள்ளனர்.

இத்திரைப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.

இந்தநிலையில் இப்படத்தில் வரும் பாடல் ஒன்றில் நடிகை பூஜா ஹெக்டே நடனமாடியுள்ளார்.

இந்த பாடல் ”மோனிகா” என்ற பெயரில் இன்று மாலை 6 மணிக்கு வெளியானது.

அனிருத், சுப்லாஷினி மற்றும் அசல் கோலார் இந்த பாடலை பாடியுள்ளனர்.

விஷ்னு எடவன் இந்த பாடலை எழுதியுள்ளார்.