
கூரிய ஆயுதத்தால் தாக்கி ஒருவர் கொலை
கொழும்பு கிராண்ட்பாஸ் நாகலகம் வீதி பிரதேசத்தில் நேற்று புதன் கிழமை மாலை 25 வயது இளைஞர் ஒருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார்.
உயிரிழந்த இளைஞன் குறித்த பகுதியில் நடந்து சென்றுக்கொண்டிருந்த போது, அவரைப் பின்தொடர்ந்து சென்ற சிலர் அவர் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர். அந்த தாக்குதலிலிருந்து தப்புவதற்கு அருகிலிருந்த வர்த்தக நிலையமொன்றுக்குள் இளைஞர் ஓடிய போது, சந்தேகநபர்கள் இளைஞர் மீது கூரிய ஆயதத்தால் தாக்கிவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர்.
இதனையடுத்து காயமடைந்த இளைஞர், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதனையடுத்து காயமடைந்த இளைஞர், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சந்தேகநபர்களை கைதுசெய்வதற்கான விசாரணைகளை கிராண்ட்பாஸ் பொலிஸார் ஆரம்பித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்
