கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை
படல்கும்புர பிரதேசத்தில் வசிக்கும் 27 வயதுடைய நபரொருவர் நேற்று செவ்வாய்க்கிழமை இரவு கூரிய பொருளால் தாக்கப்பட்டு உயிரிழந்துள்ளார்.
முச்சக்கரவண்டி சாரதியான இவர் குடும்ப தகராறு காரணமாக மற்றுமொரு நபரால் கத்தியால் குத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
21 வயதுடைய சந்தேகநபர் பிரதேசத்தை விட்டுத் தப்பிச் சென்றுள்ளதுடன், படல்கும்புர பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்