கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை

களுத்துறை – பதுரலிய பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சீலதோல பகுதியில் நேற்று புதன் கிழமை கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு நபர் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.

பதுரலிய – பதருகல்ல வத்த பகுதியை சேர்ந்த 32 வயதுடைய நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

சம்பவம் குறித்து மேலும் தெரிய வருகையில்,

உயிரிழந்தவர் தனிப்பட்ட முன்விரோதம் காரணமாக மனைவியின் தந்தையை திட்டியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த மனைவியின் தந்தை மற்றும் சகோதரன் சம்பவ இடத்திற்கு சென்று குறித்த நபரை தடி மற்றும் கூரிய ஆயுதத்தால் தாக்கியதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

உயிரிழந்தவரின் சடலம் நாகொட வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன் சம்பவம் தொடர்பில் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மொரபதிய பிரதேசத்தை சேர்ந்த 36 மற்றும் 72 வயதுடைய சந்தேகநபர்களே இதன்போது கைது செய்யப்பட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பதுரலிய பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்