
கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு பெண் கொலை
ஹொரணை, சிரில்டன்வத்தை பகுதியில் நேற்று சனிக்கிழமை மாலை பெண் ஒருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார்.
சிரில்டன்வத்த, மேவனபலன பிரதேசத்தில் வசிக்கும் 36 வயதுடைய பெண்ணே இதன்போது கொலைசெய்யப்பட்டுள்ளார்.
உயிரிழந்த பெண்ணுக்கும் வீட்டுக்கு அருகில் வசித்த நபருக்கும் இடையில் ஏற்பட்ட தனிப்பட்ட தகராறு காரணமாக குறித்த நபரும் அவரது சகோதரரும் இணைந்து இக்கொலையை மேற்கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரண்டு சகோதரர்களை பொலிஸார் கைது செய்துள்ளதுடன், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஹொரண பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்
