கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்ட பெண்கள்

பாணந்துறை – பின்வத்த பகுதியில், இன்று வெள்ளிக்கிழமை அதிகாலை, இரண்டு பெண்கள் கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இவர்கள் பின்வத்த – ஊரன்ன படவத்த பகுதியைச் சேர்ந்த 59 மற்றும் 46 வயதுடைய பெண்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த இரண்டு பெண்களும் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபடுபவர்கள் என, தெரிவிக்கப்பட்டுள்ளது.

முச்சக்கரவண்டியில் வந்த மூன்று இனம் தெரியாத  நபர்கள் இந்த தாக்குதலை நடத்திவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளதாக, பொலிஸார் தெரிவித்தனர்.

காயமடைந்த பெண்கள் பாணந்துறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.