கூரிய ஆயுதங்களால் தாக்கி ஒருவர் கொலை

களுத்துறையில் கூரிய ஆயுதங்களால் தாக்கி ஒருவர் இன்று சனிக்கிழமை அதிகாலை கொல்லப்பட்டுள்ளதாக மத்துகமை பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

மத்துகம ஓவிட்டிகல பகுதியைச் சேர்ந்த 38 வயதுடையவரே இதன்போது உயிரிழந்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருகையில்,

உயிரிழந்த நபர் மீது இன்று அதிகாலை இனந்தெரியாத சிலர் தாக்குதல் நடத்தியதாகவும், பலத்த காயமடைந்த அவர் களுத்துறை – நாகொடை போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

சந்தேகநபர்கள் இதுவரை அடையாளம் காணப்படவில்லை என்பதுடன், சம்பவம் தொடர்பில் மத்துகமை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.