
கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் – மனோ கணேசன் தெரிவிப்பு
-யாழ் நிருபர்-
அதிகாரப்பூர்வமாக அறிவிக்க விட்டாலும் எமது கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக சஜித் பிரேமதாசவே தற்போது வரை காணப்படுகிறார் என ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் தெரிவித்தார்.
யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் விருந்தினர் விடுதியில் நேற்று புதன்கிழமை இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது ஊடகவியலாளர் ஒருவரால் எழுப்பப்பட் கேள்வி ஒன்றுக்கே அவர் இவ்வாறு பதிலளித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு தேர்தல்களை வைப்பதென்றால் அலேஜி வருகின்ற நிலையில் தேர்தல் ஒன்று இடம் பெற்றால் தற்போது வரை அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படாத ஜனாதிபதி வேட்பாளராக சஜித் பிரேமதாசவே இருக்கிறார்.
சஜித் பிரேமதாசா எனது தலைவர் இல்லாவிட்டாலும் எமது கூட்டணியின் தலைவராக உள்ள நிலையில் தேர்தல் காலத்தில் மட்டும் இணைந்து செயல்படுகிறோம்.
சிறிய கட்சிகள் தேர்தல் காலத்தில் பெரிய கட்சிகளுடன் இணைந்து செயல்படும் போதுதான் வேட்பாளர்களை நிறுத்தி வெல்ல முடியும்.
இது எமது கட்சியின் கொள்கை அல்ல தேர்தல் காலத்தில் கூட்டணிகளுடன் வைத்துக்கொள்ளும் தேர்தல் கால கூட்டு மாத்திரமே.
தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உள்ளூர் ஆட்சி மன்ற தேர்தல்லை இல்லாமல் ஆகிவிட்டார. பாராளுமன்ற தேர்தலை எப்போது வைப்பார் எனத் தெரியாத நிலையில் ஜனாதிபதி தேர்தல் ஒன்றை வைத்தால் நானே ஜனாதிபதியாக வேண்டும் என்ற கனவுடன் இருக்கிறார்.
அதற்காக சர்வலோக நிவாரணியாக ஜனாதிபதி தேர்தலையே வைக்க வேண்டுமென என்ற நினைப்பில் ரணில் விக்ரமசிங்க காணப்படுகிறார்.
நாங்கள் சந்திரிகா மகிந்த போன்ற பல சர்வலோக நிவாரணிகளை கண்டுகளித்தவர்கள். நாட்டில் எத்தனையோ பிரச்சனைகள் தீர்க்கப்படாத நிலையில் மக்கள் பல்வேறு இன்னல்களை அனுபவித்து வரும் நிலையில் ஜனாதிபதி தேர்தலில் சர்வ லோக நிவாரணி என ரணில் விக்கிரமசிங்க எமக்குக் காண்பிக்க கூடாது.
ஜனாதிபதி தேர்தலை இலக்கு வைத்து ரணில் விக்கிரமசிங்க காட்சிகளில் இருப்பவர்களை பிரிக்கும் முயற்சியை மிகவும் சாதுரியமாக முன்னெடுத்து வருகிறார்.
அண்மையில் பெரமுன கட்சியில் இருக்கம் இளம் தலைவர்களையும் மூத்த தலைவர்களையும் தன் பக்கம் திருப்புவதற்கான முயற்சிகளை கச்சிதமாக ஆரம்பித்துள்ள நிலையில் விரைவில் பலர் ரணில் பக்கம் திரும்புவார்கள் என நம்புகிறேன்.
வடக்கு கிழக்கில் போட்டியிட்ட தமிழ் கட்சிகள் பல சமஸ்டிக் கோரிக்கையை மக்கள் முன்வைத்து ஆணையைப் பெற்ற நிலையில் சமஸ்டி ஆணை கஜேந்திரகுமாரின் கட்சிக்கு மட்டும் சொந்தம் அல்ல.
தந்தை செல்வா காலத்தில் இருந்து சமஸ்டி பல்வேறு தலைவர்களாலும் வலியுறுத்தப்பட்டு வந்துள்ள நிலையில் கைஜேந்திரகுமாரின் காட்சி சமஸ்டியை நாங்கள் தான் வலியுறுத்துகிறோம் என கூற முடியாது.
சமஸ்டி ஆணையைப் பெற்ற தமிழ் கட்சிகள் சமஸ்டியை அடைவதற்கான பாதைகள் வெவ்வேறாக இருந்தாலும் அவர்களின் இலக்கு சமஸ்டி தான்.
சமஸ்டியை அடைவதற்கான முதற்கட்ட வழியாக பெரும்பாலான தமிழ் கட்சிகள் 13 வது திருத்தத்தை ஆரம்ப புள்ளியாக எடுத்துக்கொண்டு முன்னோக்கி நகர்வதற்கான பேச்சுவார்த்தைகள் இடம் பெற்று வருகின்றன.
13 அரசியலமைப்பில் உள்ளடக்கப்பட்டு 40 வருடங்கள் கடந்த நிலையில் இன்னும் நடைமுறைப்படுத்தப்படாத நிலையே காணப்படுகிறது.
ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் தலைவராக இருக்கின்ற டக்ளஸ் தேவானந்தாவும் பல வருட காலமாக மத்தியில் கூட்டாட்சி மாநிலத்தில் சுயாட்சி என வலியுறுத்தி வருகிறார்.
மாநிலத்தில் சுயாட்சி என்பது சமஸ்டியாகக் காணப்படுகின்ற நிலையில் தமிழ் கட்சிகள் பெரும்பாலும் சமஸ்டி என்ற நிலைப்பாட்டிலே உள்ளன.
எனக்கு வடக்கில் போட்டியிடும் எண்ணம் இல்லை
தமிழ் மக்கள் எனது இரத்தம் அவர்களுக்காக பல்வேறு சந்தர்ப்பங்களில் குரல் கொடுத்து வந்துள்ள நிலையில் வடக்கில் தேர்தல்களில் போட்டியிடும் எண்ணம் எனக்கு இல்லை.
கடந்த வட மாகாண சபையைத் தேர்தல் காலத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்காக கிளிநொச்சி மாவட்டத்தில் பிரச்சார நடவடிக்கையில் ஈடுபட்டேன்.
எங்களுக்கும் தமிழ் கூட்டமைப்புக்கும் நீண்ட கால உறவும் புரிதலும் இருக்கின்ற நிலையில் தமிழ் மக்கள் அவர்களுக்கு வழங்கும் ஆணையை எமது ஆணையாக ஏற்று எமது உறவுகளுக்காக குரல் கொடுப்போம்.
ஆகவே தமிழ் கட்சிகள் சமஷ்டியா பதின்மூன்றா என்பதில் பிரச்சனைப்படாமல் இரண்டும் தமிழ் மக்களின் அரசியல் தீர்வான சமஸ்டித் பாதையை அடைவதற்கான வழி என அவர் மேலும் தெரிவித்தார்.
