
‘குஷ்’ போதைப்பொருளுடன் 4 வெளிநாட்டவர்கள் கைது
ஹபராதுவ பொலிசாரினரால் ஹபராதுவ – தல்பே பிரதேசங்களில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது 16 கிலோவிற்கும் அதிகமான ‘குஷ்’ போதைப்பொருளுடன் 4 வெளிநாட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் 21-46 வயதுடையவர்கள். எனவும் இவர்கள் இன்று காலி நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாகவும் பொலிசார் தெரிவித்துள்னர்.
