குஷ் போதைப்பொருளுடன் இந்திய பிரஜை கைது

இந்தியாவின் சென்னையில் இருந்து நாட்டிற்கு கொண்டு வரப்பட்ட 21.3 மில்லியன் ரூபா பெறுமதியான குஷ் போதைப்பொருட்களுடன் இந்திய பிரஜை கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்டவர் 38 வயதான சாரதி எனவும் நேற்று இரவு ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானம் மூலம் சென்னையிலிருந்து கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்துள்ளார்.

பறிமுதல் செய்யப்பட்ட போதைப்பொருள் 02 கிலோகிராம் 130 கிராம் எடை கொண்டது என மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.