குவைட்டில் இருந்து 52 பேர் மீண்டும் நாட்டுக்கு

தொழில் நிமித்தமாக குவைட் நாட்டுக்கு சென்று நாடு திரும்ப முடியாமல் இருந்த 52 பேர் இன்று திங்கட்கிழமை அதிகாலை கட்டுநாயக்க விமான நிலையத்தின் ஊடாக நாட்டை வந்தடைந்தனர்.

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸுக்குச் சொந்தமான UL 230 விமானத்தில், 17 ஆண்களையும் 35 பெண்களையும் உள்ளடக்கிய இக் குளு இன்று அதிகாலை நாட்டை வந்தடைந்து.

குவைட்டில் உள்ள இலங்கைத் தூதரகத்தில் பதிவு செய்யப்பட்டு இவ்வாறு நாட்டுக்கு அனுப்பப்பட்ட ஐந்தாவது குழு இதுவாகும்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்