குழந்தை பெற்றெடுக்க சிகிச்சைக்கு சென்ற பெண்: வைத்தியர் செய்த காரியம்!
பியகம சியாம்பலாபே பகுதியில் குழந்தை பெற்றெடுப்பதற்காக சிகிச்சை பெறச் சென்ற பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த குற்றச்சாட்டில் ஆயுர்வேத வைத்தியர் கைது செய்யப்பட்டுள்ளதாக சிறுவர் மற்றும் பெண்கள் துஷ்பிரயோகத் தடுப்புப் பணியகத்தின் தலைமையகம் தெரிவித்துள்ளது.
57 வயதான ஆயுர்வேத வைத்தியரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
திருமணமாகி குழந்தை இல்லாததால் 42 வயதுடைய குறித்த பெண் தனது கணவருடன் நான்கு தடவைகள் ஆயுர்வேத வைத்தியரிடம் சென்றதாகவும் சந்தேகம் ஏற்படாத நிலையில் கடந்த 12 ஆம் திகதி தனியாக வைத்திய நிலையத்திற்கு சென்ற போது சந்தேகநபரான வைத்தியர் தன்னை பாலியல் வன்கொடுமை செய்துள்ளதாக அவர் பொலிஸாரிடம் முறையிட்டுள்ளார்.
குறித்த முறைப்பாடு தொடர்பில் சிறுவர் மற்றும் பெண்கள் துஷ்பிரயோக தடுப்பு பணியக தலைமையகத்தின் நிலைய பொறுப்பதிகாரி திருமதி சாமந்தி ரேணுகா தலைமையில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்