குழந்தையின்மை பிரச்சினைக்கான இலவச மருத்துவ முகாம்

-யாழ் நிருபர்-

குழந்தையின்மைக்கான இலவச மருத்துவ ஆலோசனை முகாம் லயன்ஸ் கழகத்தின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணத்தில் இடம்பெறவுள்ளது.

யாழ்ப்பாண லயன்ஸ் கழகத்தின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணம் சென்பற்றிக்ஸ் வீதியில் உள்ள லொயலாஸ் மண்டபத்தில் இன்று சனிக்கிழமை மற்றும் நாளை ஞாயிற்றுக்கிழமை என இரண்டு தினங்கள் காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை முகாம் இடம்பெறவுள்ளது.

முகாமில் இந்திய வைத்திய நிபுணர் தாட்ஷாயினி கலந்து கொண்டு மருத்துவ ஆலோசனைகளை வழங்கவுள்ளார்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்