
குழந்தைக்கு அதிக அளவு மருந்து: ஜோடி கைது
குருநாகல் ரிதிகம பகுதியில் ஒரு வயது மூன்று மாதங்களேயான குழந்தைக்கு நோய் காரணமாக அளவுக்கு அதிகமாக மருந்தை வழங்கியதாக கூறப்படும் குற்றச்சாட்டில், குழந்தையின் தாயார் மற்றும் அவளுடைய முறையற்ற கணவன் கைது செய்யப்பட்டுள்ளதாக ரிதிகம பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குழந்தையின் உடல்நிலை மோசமடைந்து, குருநாகல் போதனா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட நபர் 22 வயதுடைய சிப்பாய் ஆவார், அவர் இராணுவத்தை விட்டு தப்பியோடிவர் என தெரிவித்த ரிதிகம பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்தனர்.
