குழந்தைகளுடன் பணிபுரியும் தாய்மார்களுக்கு நேர அவகாசம் நீடிப்பு

சிறு குழந்தைகளுடன் பணிபுரியும் தாய்மார்களுக்கு தாய்ப்பால் கொடுப்பதற்கான ஒரு மணி நேர அவகாசம் இரண்டு மணி நேரமாக நீட்டிக்கப்பட்டுள்ளதாக தொழிலாளர் துறை மகளிர் மற்றும் குழந்தைகள் நல ஆணையாளர் என்.எம்.ஒய். துஷாரி தெரிவித்துள்ளார்.

ஆகஸ்ட் மாதம் முதல் வாரத்தில் நடைபெறவுள்ள தாய்ப்பால் வாரத்திற்கான சுகாதார மேம்பாட்டுப் பணியகத்தில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்