குளிரூட்டிகளின் உதிரிபாகங்களை திருடிய மூவர் கைது

கொழும்பில் குளிரூட்டிகளின் உதிரிபாகங்களை திருடப்பட்ட முச்சக்கரவண்டிகளில் திருடிச் சென்ற மூவரடங்கிய கும்பல் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட குண்டுடன் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதன்போது 5 குளிரூட்டிகள், அவற்றைக் அகற்ற பயன்படுத்தப்பட்ட உபகரணங்கள், முச்சக்கரவண்டி மற்றும் 10 கிராம் ஹெரோயின் என்பனவும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

மாளிகாவத்தை பகுதியில் 10 கிராம் ஹெரோயினுடன் கைது செய்யப்பட்ட நபரிடம் இருந்து கிடைத்த தகவல் மற்றும் மாளிகாவத்தை பகுதியில் உள்ள இரண்டு பல்பொருள் அங்காடிகளில் குளிரூட்டிகள் திருடப்பட்ட இரண்டு சம்பவங்கள் தொடர்பிலான முறைப்பாட்டின் பிரகாரம் விசாரணைகளை மேற்கொண்டுள்ளபட்டதையடுத்தே இந்த கைது இடம்பெற்றுள்ளது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்