வாகனத்தை செலுத்தி விபத்தை ஏற்படுத்திய 14 வயது சிறுவன் கைது

குளியாப்பிட்டிய – மாதம்பே வீதியின் கனதுல்ல பகுதியில் மோட்டார் சைக்கிள் ஒன்றும் டிஃபெண்டர் ரக வாகனம் ஒன்றும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் மோட்டார் சைக்கிளில் பயணித்தவர் நபர் பலியானார்.

குறித்த நபர் குளியாப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

சம்பவத்தில் குளியாப்பிட்டிய – குரதல்பொத்த பகுதியைச் சேர்ந்த 39 வயதான ஒருவரே உயிரிழந்தார்.

இந்த விபத்தை அடுத்து குறித்த பகுதியில் இருந்த மக்களால் டிஃபெண்டர் ரக வாகனத்தின் மீது தீ வைக்கப்பட்டுள்ளது.

குறித்த டிஃபெண்டர் ரக வாகனத்தை செலுத்திய நபர் கைது செய்யப்பட்டுள்ளதோடு, 14 வயது சிறுவன் ஒருவனே இவ்வாறு வாகனத்தை செலுத்தியமையும் தெரியவந்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு அறிவித்துள்ளது.