குளியலறையில் மதுபான உற்பத்தி: பெண் கைது

அநுராதபுரம் – எட்டவீரகொல்லேவ பகுதியில் வீடொன்றின் குளியலறையில் சட்டவிரோத மதுபான உற்பத்தி நிலையத்தை நடத்திவந்த பெண்ணொருவரை சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபரிடமிருந்து 200,000 ரூபாய் மதிப்புள்ள கோடா, கசிப்பு மற்றும் சில பொருட்களையும் பொலிஸார் பறிமுதல் செய்துள்ளனர்.

சந்தேக நபரைக் கைது செய்யச் சென்றபோது, ​​அவர் பொலிஸாரின் கடமைகளுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் செயற்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

எட்டவீரகொல்லேவ பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டது.