குளித்து முடித்ததும் வியர்க்காமல் இருக்க
குளித்து முடித்ததும் வியர்க்காமல் இருக்க
குளித்து முடித்ததும் வியர்க்காமல் இருக்க
🟤பொதுவாக வியர்வை பலருக்கும் எரிச்சலுணர்வை அதிகரிக்கும். அதுவும் நல்ல குளியலைப் போட்டுவிட்டு வந்ததும் வியர்த்தால் எப்படி இருக்கும். நிச்சயம் கோபம் வரத் தான் செய்யும்.
🟤நீங்கள் சுடுநீரில் குளிப்பவராக இருந்தால், இந்த வியர்வை பிரச்சனையை கட்டாயம் சந்திக்கக்கூடும். ஏனெனில் சுடுநீரில் குளிக்கும் போது சருமம் மற்றும் தலைமுடி குளித்த பின்னரும் தொடர்ந்து வெதுவெதுப்பான நிலையில் இருக்கும். அதோடு சுடுநீரில் இருந்து வெளிவரும் ஆவியானது குளியலறையின் வெப்பநிலையை அதிகரித்து ஒரு வெதுவெதுப்பான உணர்வை அதிகம் கொடுக்கும். இந்நிலையில் உடலின் வெப்பநிலையும் அதிகரித்து, வியர்க்க வைக்கிறது.
🟤மேலும் குளித்து முடித்த பின்னர் உடலை டவல் கொண்ட தேய்த்த துடைப்போம். அப்படி தேய்க்கும் போது சருமத்தில் அதிக உராய்வின் காரணமாக உடல் வெப்பநிலை அதிகரித்து வியர்க்க வைக்கிறது. குளித்து முடித்ததும் வியர்க்காமல் இருக்க என்ன செய்ய வேண்டும் என்பதை இக்கட்டுரையில் பார்க்கலாம்.
குளிர்ந்த நீரில் குளிக்கவும்
💦குளித்த பின் அதிகம் வியர்க்கிறதா? அப்படியானால் சுடுநீரில் குளியலை முடித்த பின்னர், இறுதியில் ஒரு கப் குளிர்ந்த நீரால் உடலை அலசுங்கள். இதனால் உடல் வெப்பநிலை குறைந்து, குளித்த பின் ஏற்படும் வியர்வையைக் குறைக்கலாம்.
தொட்டு உலர்த்தவும்
💦குளித்து முடித்த பின்னர் டவல் கொண்டு உடலை தேய்த்து துடைத்தால், அந்த உராய்வின் காரணமாக உடல் வெப்பநிலை அதிகரித்து, வியர்க்க வைக்கும். எனவே எப்போதும் குளித்து முடித்த பின் டவல் கொண்டு ஒத்தி எடுங்கள். அதுவும் கோடைக்காலத்தில், குளித்து முடித்து உடலை துணியால் ஒத்தி எடுத்த பின்னர் டால்கம் பவுடரைப் பயன்படுத்தினால், உடல் புத்துணர்ச்சியுடன் இருக்கும்.
உடலை குளிர்விக்கவும்
💦ஒருவர் அதிகம் வியர்த்தால், உடனே குளிக்க வேண்டுமென விரும்புவோம். ஆனால் உடற்பயிற்சி செய்து வியர்த்திருந்தால், 25-30 நிமிடம் கழித்தே குளிக்க செல்ல வேண்டும். இது உடலின் வெப்பநிலையைக் குறைக்க உதவுவதோடு, வியர்வையையும் குறைக்க உதவும்.
குளிர்ந்த நீரால் முடியை அலசவும்
💦சுடுநீர் தலைமுடி மற்றும் ஸ்கால்ப்பையும் சூடேற்றும். எனவே தலைக்கு எப்போதும் வெதுவெதுப்பான நீர் அல்லது குளிர்ந்த நீரையே பயன்படுத்த வேண்டும். அதுவும் குளிர்ந்த நீரால் தலைமுடியை அலசிய பின்னர் மிகுந்த புத்துணர்ச்சியை உணரலாம். அதோடு, தலைக்கு குளித்த பின் முடியை உலர்த்த உடனே ஹேர் ட்ரையர் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும்.
குளியலறையில் ஆடைகளை மாற்றுவதைத் தவிர்க்கவும்
💦பெரும்பாலான மக்கள் குளித்து முடித்த பின்னர் குளியலறையிலேயே தங்களின் ஆடைகளை அணிந்து கொண்டு வருவார்கள். இப்படி குளியலறையில் நீண்ட நேரம் ஈரப்பதமான சூழ்நிலையில் இருந்தால், அது அதிகப்படியான வியர்வைக்கு வழிவகுக்கும். எனவே இதைத் தவிர்க்க, குளித்து முடித்ததும் படுக்கை அறைக்கு வந்து உடையை மாற்றும் பழக்கத்தைக் கொள்ளுங்கள்.
சீக்கிரம் குளித்துவிட வேண்டும்
💦சிலர் மணிக்கணக்கில் குளியலறையில் நேரத்தை செலவழிப்பார்கள். குளித்த பின்னர் வியர்ப்பதற்கு குளியலறையில் நீண்ட நேரம் இருப்பதும் ஓர் காரணம். எனவே எவ்வளவு சீக்கிரம் குளித்துவிட முடியுமோ, அவ்வளவு சீக்கிரம் குளித்துவிட்டு குளியலறையில் இருந்து வெளியே வர முயலுங்கள்.
குளித்து முடித்ததும் வியர்க்காமல் இருக்க
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்