குளித்துக்கொண்டே மோட்டார்சைக்கிள் ஓட்டும் இளைஞன்!
இந்தியாவில் தஞ்சாவூரில் குளித்துக்கொண்டே மோட்டார்சைக்கிள் ஓட்டிய இளைஞரின் விடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
தஞ்சை பழைய பேருந்து நிலையப் பகுதியில் இருந்து இளைஞன் ஒருவர் மோட்டார்சைக்கிள் ஓட்டிக் கொண்டே முன்புறம் வாளியில் தண்ணீரை வைத்துக் கொண்டு, குவளையில் தண்ணீரை எடுத்து தன் மீது ஊற்றிக் கொண்டே வாகனத்தை இயக்கி செல்கிறார்.
இந்த விடியோ இணையதளத்தில் வைரலாகி வருகிறது. இதில் இந்த இளைஞர் போக்குவரத்து விதிகளை கடைபிடிக்காமல் வாகன குளியல் நடத்தியது சமூக ஆர்வலர்கள் மத்தியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்