குளவி கொட்டு: 7 பேர் வைத்தியசாலையில்
பொகவந்தலாவ – கெர்கஸ்வோல்ட் பகுதியில் குளவி கொட்டுக்கு இலக்கான 7 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
பெருந்தோட்ட பகுதியில் தொழிலில் ஈடுபட்டிருந்தவர்களே இவ்வாறு குளவி கொட்டுக்கு இலக்காகியுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
குளவி கொட்டுக்கு இலக்கானவர்களில் ஐவர் தோட்ட மருத்துவமனையிலும் ஏனைய இருவர் பொகவந்தலாவ பிரதேச வைத்தியசாலையிலும் அனுமதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
பொகவந்தலாவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட இருவரில் ஒருவர் மேலதிக சிகிச்சைகளுக்காக டிக்கோயா ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் குறிப்பிட்டார்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்
