
குளவி கொட்டுக்கு இலக்காகிய 7 தொழிலாளர்கள் வைத்தியசாலையில்
நோர்வூட் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பொகவந்தலாவ பகுதியில் குளவி கொடுக்கு இலக்காகி 7 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கெர்க்கஸ்வோல்ட் கீழ் பிரிவு தோட்ட தேயிலை மலையில் தேயிலை பறித்து கொண்டிருந்த 7 தொழிலாளர்களே இன்று வியாழக்கிழமை மாலை 5 மணி அளவில் குளவி கொட்டுக்கு இலக்காகியுள்ளனர்.
பொகவந்தலாவ கெர்க்கஸ்வோல்ட் கீழ்ப்பிரிவு தோட்ட தேயிலை மழையில் மரம் ஒன்றில் இருந்த குளவி கூடு கலைந்து வந்து தொழிலாளர்களை தாக்கியுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்
