
குளவி கொட்டுக்கு இலக்கான மூவர் வைத்தியசாலையில் அனுமதி
-மஸ்கெலியா நிருபர்-
குளவி கொட்டுக்கு இலக்கான மூவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இச் சம்பவம் இன்று செவ்வாய்க்கிழமை மதியம் மஸ்கெலியா பொலிஸ் பிரிவில் உள்ள டீசைட் தோட்டத்தில் இடம் பெற்றுள்ளது.
தேயிலை கொழுந்து பறித்து கொண்டு இருந்த வேளையில் தேயிலை செடியின் கீழ் பகுதியில் இருந்த குளவி கலைந்து தேயிலை கொழுந்து பறித்து கொண்டு இருந்த பெண் ஒருவர் மற்றும் ஆண்கள் இருவரை குளவி கொட்டியது.
குளவி கொட்டுக்கு இலக்கான மூன்று பேரும் மஸ்கெலியா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு இரண்டு ஆண்கள் மேலதிக சிகிச்சைக்காக கிளங்கன் ஆதார வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளதாக மஸ்கெலியா மாவட்ட வைத்தியசாலையில் உள்ள வைத்திய அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
