
குளவி கொட்டுக்கு இலக்கான ஐவர் லுணுகலை வைத்தியசாலையில் அனுமதி
-பதுளை நிருபர்-
லுணுகலை அடாவத்தை தோட்டத்தில் இன்று திங்கட்கிழமை காலை 11 மணியளவில் குளவி கொட்டுக்கு இலக்கான ஐவர் லுணுகலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கொழுந்து பறித்துக் கொண்டிருந்த 4 பெண் தொழிலாளர்களை குளவி கூடு கலைந்து தாக்கியுள்ளன.
இதன்போது அவர்கள் கூக்குரல் இட்ட சத்தம் கேட்டு காப்பாற்ற சென்ற அடாவத்தை தொழிற்சாலையில் கடமை புரிந்து கொண்டு இருந்த ஊழியர் ஒருவரும் குளவி கொட்டுக்கு இலக்காகியுள்ளார்.
இந்நிலையில் குளவி கொட்டுக்கு இலக்கான ஐவரும் லுணுகலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்
