
குளவி கொட்டுக்கு இலக்கான 13 பேர் வைத்தியசாலையில்
கதிர்காமம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட செல்லக்கதிர்காமம் பாலத்துக்கு அருகில் சிறுவர்கள் மற்றும் அவர்களது பெற்றோர் சிலர் குளவிக் கொட்டுக்கு இலக்காகியுள்ளனர்.
இதன்போது 4 சிறுவர்களும், 6 சிறுமிகளும் மற்றும் ஒரு பெண் மற்றும் இரண்டு ஆண்கள் என மொத்தம் 13 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இவர்கள் அனைவரும் செல்லக்கதிர்காமம் பிரதேசத்தை சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்படுகிறது.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்
