குளவிக் கொட்டுக்கு இலக்கான 30 மாணவர்கள் வைத்தியசாலையில்

கேகாலை மாவனெல்ல பிரதேசத்தில் குளவிக் கொட்டுக்கு இலக்காகி 30 மாணவர்கள் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மேலதிக வகுப்புக்கு சென்ற 30 மாணவர்களே இவ்வாறு குளவிக்கொட்டுக்கு இலக்காகி காயமடைந்து சிகிச்சைக்காக மாவனெல்ல ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மாணவர்களின் நிலை குறித்து மேலதிக தகவல்கள் எதுவும் கிடைக்காத நிலையில் குறித்த பகுதிகளில் அதிகளவான குளவிகள் காணப்படுவதாகவும் இதனால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் பொது மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.