குளவி கொட்டுக்கு இலக்கான முதியவர் உயிரிழப்பு
யாழ்ப்பாணம் மானிப்பாய் பகுதியில் நேற்று முன்தினம் ஞாயிற்று கிழமை குளவி கொட்டுக்கு இலக்கான முதியவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நவாலி வடக்கு, மானிப்பாய் பகுதியை சேர்ந்த நடராசா சந்திரமோகன் (வயது – 70) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
குறித்த முதியவர் காணி ஒன்றினை சுத்தம் செய்துகொண்டிருந்தபோது குளவி கொட்டுக்கு இலக்காகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதை தொடர்ந்து உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவரது சடலம் மீதான பிரேத பரிசோதனை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்துடன் சடலம் இன்று செவ்வாய்க்கிழமை உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்